English | தமிழ்

முன்னோட்ட காட்சிகள்

காட்சி 1   |  காட்சி 2

கதைச் சுருக்கம்

சுந்தரி - இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இளம் பெண். தென்னிந்தியாவின் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்கிறாள். தொழில் தொடங்குவதற்கான கடனுதவியை பெறக்கூடிய வாய்ப்பு, ஒரு நுண்பொருள் உதவி மையத்திலிருந்து அவளுக்குக் கிடைக்கிறது. இக்கடனுதவியை வைத்து ஒரு தொழில் துவங்க அவள் எண்ணுகிறாள்.

இத்தனை நாட்களாக ஒரு குடும்பத்தலைவியாக மட்டுமேயிருந்த அவள், இனி என்ன தொழில்செய்து சாதிக்கப் போகிறாள் என்று, அவள் கணவன் அவள் இலட்சியத்தை ஏளனப்படுத்துகிறான். ஒரு தொழிலில் தன் காலைப் பதிக்க அவள் படாத பாடுபடுகிறாள்.

அப்போது, ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அந்த கிராமத்தில் துவக்கி நடத்துவதற்காக நகரத்திலிருந்து வருகிறாள் ஒரு பெண்மணி. இப் பெண்ணால், அக்கிராமத்தில் பல குழப்பங்கள் வெடிக்கின்றன.

உலக நோக்கு விரிவடைந்துகொண்டிருக்கும் தறுவாயில், வெற்றியைத் தேடிச் செல்லும் ஒரு கிராமத்துப் பெண்ணின் கதை இது. கிராமத்தில் வசிக்கும் ஒரு சாதாரண குடும்பம், தன் தற்போதைய நிலைக்கும் தான் அடையக்கூடிய இலட்சிய இலக்கிற்கும் இடையே சமதளத்தைத் தேடி தத்தளிக்கும் ஒரு கதை.

மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் சுய உதவிக் குழுவின் பெண்களுடன் நடத்திய எண்ணற்ற கலந்துரையாடல்களின் மூலம் உருவான கதை, ‘சக்தி பிறக்குது’.

வறுமையில் வாடும் கிராம மக்கள், பரந்து விரிந்து திகழும் வெளி உலகை நோக்கித் தங்கள் பார்வையைச் செலுத்தி, ஒரு இலட்சியக் கண்ணோட்டம் கொண்டு தங்கள் இலக்குகளை உயர்த்தி, தங்கள் சுய முன்னேற்றத்திற்கான பொறுப்பைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும்படி ஊக்குவிக்கும் முன்னுதாரணம்தான், ‘சக்தி பிறக்குது’.

திரைக்குப் பின்

மதுரா மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைவரான தாரா தியாகராஜனுக்கும், ப்ரக்ரிதி ஜீவா மீடியா என்ற படத்தயாரிப்பு நிருவனத்தின் ஸ்தாபகரான உஷா இராஜேஸ்வரிக்கும் இடையே நடந்த கலந்துரையாடல்களிலிருந்து உருவானதுதான், ‘சக்தி பிறக்குது’ திரைப்படம்.

மதுரா நிருவனம் சில வருடங்களாக சுய உதவிக் குழு பெண்களுக்குக் கடனுதவி அளித்துக்கொண்டு வந்திருந்தது. இந்த கடனுதவித் திட்டம், 15 வருடங்களுக்கு முன், முன்னாளய மதுரா வங்கி துவக்கிய நுண்-கடன்-உதவித் திட்டத்தின் மரபில் வந்திருந்தது. பல சமூகப் ப்ரச்சனைகளை எதிர்க்கொள்ள சுய உதவிக் குழு பெண்களுக்குப் பயிற்சியளித்தது மதுரா. சுய உதவிக் குழு பெண்களும் விசுவாசத்துடன் எடுத்த கடன் பணத்தை சரியாக திருப்பி செலுத்தினர்.

ஆனால், பெரும்பாலான சுய உதவிக் குழுப் பெண்களுக்கு, கடன் பணத்தை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று சரியாகத் தெரியவில்லை. அவர்கள் துவக்கிய தொழில்களும் அடிக்கடி மடிந்தன. பிழைப்பு மட்டப் பொருளாதார நிலையிலிருந்து அவர்கள் தொழில்கள் உயரவில்லை.

முக்கால்வாசிப் பெண்கள் தங்கள் வீட்டை ஒட்டியே சிறு தொழில்களை நடத்தினார்கள். அவர்கள் தயாரித்த பொருட்களை, அதிகபட்சமாக, அவரவர் கிராமங்களை விட்டு வெளியே எங்கேயும் சந்தைப்படுத்தவில்லை.

நகரத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், குழுப் பெண்களின் தயாரிப்புகள் தரத்தில், திறன்பாட்டில், புதுமையில், நகரத்துடன் ஈடு குடுக்க முடியவில்லை.

இதனால் குழுப் பெண்களுக்கு அறிவில் குறைவு என்று அர்த்தமில்லை. ஆனால் படிப்பறிவிற்கான சந்தர்ப்பமின்மை, தங்கள் கிராமத்தை விட்டு வெளி உலகம் தெரியாத, கிணற்றுத் தவளைப் போலிருந்த அவர்கள் நிலமை, விதியே கதி என்ற அவர்களின் மனப்பான்மை, இவையே அவர்களது போக்கை நிர்ணயித்தது.

வியாபார படிப்பறிவும், சந்தைகளைப் பற்றிய விழிப்புணர்வும் குழு பெண்களுக்கு ஒரு பயிற்சியாக அளிக்க மதுரா நிருவனம் திட்டமிட்டது. அதற்காக உஷா ராஜேஸ்வரியை அணுகியது.

பல வேறு கதைகளையும் காட்சிகளையும் கொண்டு, அடிப்படை வியாபார நெறிகளை அப்பெண்களுக்கு எடுத்துறைக்க ஒரு ஆவணப்படத்தைத் தயாரித்து, அதன் மூலமாக பெண்கள் தங்கள் கிராமத்திற்கு அப்பாலுள்ள சந்தைகளையும் வியாபார யுக்திகளையும் அறிந்துகொள்ள ஊக்குவிக்கும் குறிக்கோளுடன் இப்படம் திட்டமிடப்பட்டது.

இந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக உஷா ராஜேஸ்வரி சுய உதவிக் குழு பெண்களுடன் பல கலந்துரையாடல்கள் நடத்தினார். அவர்களுடன் பேசப் பேச, அவர்களது வாழ்க்கை, லட்சியங்கள், குடும்பங்கள், உலகத்தைப் பற்றிய அவர்களது கண்ணோட்டம், இவற்றைப் பற்றித் தெரிந்துகொண்ட போது, அவர் மனதில் அவர்களைப் பற்றிய ஒரு கதை உருவாகத் தொடங்கியது. சுய உதவிக் குழு பெண்களைப் பற்றி இரண்டு மணி நேர முழு நீள திரைப்படத்தை உருவாக்கும் யோசனையை அவர் எடுத்துரைத்தார்.

வியாபாரத்திற்கான பயிற்சியின் விரிவும் அளவும் கருத்தில் கொண்ட மதுரா நிறுவனத்தின் தலைவர் தாரா தியாகராஜன் அவர்களுக்கு, இப்படிப்பட்ட திரைப்படம் சரிப்படும் என்று நம்பிக்கை வரவில்லை. அதைத் தவிர்த்து, இப்படியொரு முழு நீள திரைப்படத்தைத் தயாரிக்கும் அளவிற்கு மதுரா நிறுவனத்திடம் வரவு-செலவுத் திட்டம் இருக்கவில்லை.

ஒரு பயிற்சிப் படத்தைத் தயாரிக்கவே மதுரா நிறுவனம் தொடர்ந்து எண்ணியது. இதற்காக, மார்கெட்ப்லேஸ் லிட்ரெசி ப்ராஜெக்ட் என்ற ஒரு அரசு சாரா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தது. இன் நிறுவனத்தின் அமைப்பாளர், மது விஸ்வனாதன் என்பவர், அமெரிக்காவின் அர்பானா-ஷாம்பேனிலுள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். அவர் பல வருடங்களாக பிழைப்பு மட்டப் பொருளாதார சந்தை மையத் தொழில் முனைவோரைப் பற்றி ஆராய்ச்சி செய்து, அவர்களுக்காக விரிவான ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கி, அதன் மூலமாக அவர்களுக்குப் புதுமையான தொழில் பயிற்சியும் அளித்து வந்தார்.

உஷா ராஜேஸ்வரி, ஒரு திரைப்படத்தை உருவாக்கும் அவரது கனவை விடவில்லை. தனக்கு ஊக்கமளித்த சுய உதவிக் குழுப் பெண்களுடனும் , மது விஸ்வநாதன் மற்றும் அவரது குழுவினருடனும் உரையாடல்களைத் தொடர்ந்து நடத்தி, ஒரு கதையையும் திரைக்கதையையும் உருவாக்கினார். இத்திரைக்கதையில், மர்மம் ஊடுருவும் ஒரு குணச்சித்திர குடும்பக் கதையினூடே, மதுரா நிறுவனத்தின் மையக் கருத்தான தொழில் முனைவின் சாராம்சத்தையும் இணைத்துப் பின்னியிருந்தார்.

இத்திரைக்கதையின் முதல் ப்ரதி, 20 நவெம்பர் 2007 அன்று, இரவு 2 மணிக்குத் தாரா அவர்களின் இணையதளப் பெட்டிக்கு வந்தடைந்தது. அதை உடனே படித்த தாரா அவர்கள், இதை ஒரு முழு நீள திரைப்படமாக உருவாக்கி பலவித மக்களுக்குப் போட்டு காட்ட வேண்டும் என்று, அன்று வெடிகாலை 4 மணிக்கு நிர்ணயித்தார். ஆனால் அதற்கு முன் இந்த திரைக்கதையில் பல மாற்றங்கள் தேவைப்பட்டன. அதன் அமைப்பையும் அதில் சொல்லப்படும் கருத்தையும் பதப்படுத்தி, அதற்கு வேண்டிய பணத்தையும் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. தாரா இரண்டு பக்கங்களுக்கு பதிலை எழுதி உஷா ராஜேஸ்வரிக்கு அனுப்பினார்.

இந்தத் திரைப்படம் ஒரு லட்சியத் திட்டப்பணி. இது வெறும் பொழுதுபோக்குப் படமாக இருக்காது. மாறாக, உண்மையான சமூக சீர்திருத்தத்தை ஊக்குவிக்கும் திரைப்படமாக அமைய வேண்டும். சமூக உண்மைகளைச் சித்தரிக்க வேண்டும். கிராமப் பெண்களுடன் உணர்வு ரீதியாக ஆழ்ந்த இணைப்பை உண்டுபண்ண வேண்டும். திரைப்படத்தின் கதாநாயகியும் அவளது கதையும் கிராமப் பெண்களின் உண்மைக் கதையைப் ப்ரதிபலிப்பது மட்டுமல்லாமல், அவர்களை மாற்றி யோசிக்க வைத்து, தங்கள் வாழ்க்கையில் இன்னும் உயரவேண்டி ஊக்குவிக்கவும் வேண்டும். உஷா ராஜேஸ்வரி பல கிராமத்துப் பெண்களுடன் தன் திரைக்கதையைப் பற்றி கலந்துரையாடினார்.

“உங்கள் கிராமத்தில் இப்படி நடக்கக்கூடுமா? நீங்கள் இவ்வாறு பதில் கூறுவீர்களா?” என்று அவர்களைத் துருவிக் கேட்டுத் தெரிந்துகொண்டார். திரைக்கதை, வசனங்கள், இவற்றை மதுவுடனும் அவருடைய குழுவினருடனும் சேர்ந்து பதப்படுத்தி, வியாபாரத்திற்கும் தொழில் முனைவிற்கும் தேவையான கருத்துகளை ஆழமாகவும் தெளிவாகவும் ஆனால் அதே சமயம் நாசூக்காகவும், அதில் உட்புகுத்தினார்.

இறுதியாக, கதையின் வசனங்கள் நம்பத்தக்கதாக இருக்க வேண்டி, மதுரா நிறுவனத்தைச் சேர்ந்த தமிழ் நாட்டு கிராமப்பெண்களான இரு மாஜி சுய உதவிக் குழுப் பெண்களுடன் கலந்துரையாடி, வசனங்களும் மதுரை மண் வாசனை வீசுமாறு மாற்றப்பட்டன.

ஜனவரி 2009ல் இத்திரைப்படத்தின் தயாரிப்பு மும்முரமாகத் துவக்கப்பட்டது. இதன் பட்ஜெட் மிகவும் குறைவாக இருந்தாலும், தரம் அதை விட பத்து மடங்கு உயர்ந்த விதத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் நம்பிக்கை வைத்து இதற்காக மிகக் குறைந்த விலை வீதத்திற்காக தங்கள் திறமையையும் உழைப்பையும், திரைப்படக் கருவிகளையும் குடுத்த எண்ணற்ற நபர்களாலேயே இது சாத்தியப்பட்டது.

திரைப்படத்தின் முதல் ப்ரதி அவ்வருட இறுதியில் முடிக்கப்பட்டது. ‘சக்தி பிறக்குது’ என்று திரைப்படத்திற்குப் பெயரிடப்பட்டது. இப்பெயர் மஹாகவி சுப்ரமணிய பாரதியின் ‘சக்தி பிறக்குது மூச்சினிலே’ என்ற வரிகளிலிருந்து எடுக்கப்பெற்றது. இதே வரிகளைக் கொண்டு இப்படத்தின் மையப்பாடலும் அமைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் இதை ‘சக்தி ரைசிங்’ என்று மொழி பெயர்த்தப்பட்டது.

இத்திரைப்படத்தின் கருத்துகளின் பயன்விளைவை தெரிந்துகொள்ள, இதனை சில கிராமப் பெண்களுக்குப் போட்டுக் காட்டப்பட்டது. திரையிடப்பட்ட பல வாரங்களுக்குப் பிறகு, அவர்கள் அப்படத்திலிருந்து என்ன தெரிந்து கொண்டார்கள் என்றும், அவர்கள் குடும்ப்த்துடனும் நண்பர்களுடனும் அதனைப் பற்றி என்ன பேசினார்கள் என்றும் கேட்கப்பட்டது.

அப்போது அவர்கள் அத்திரைப்படத்தை நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்ததையும், அதில் கூறப்பட்ட கருத்துகள் அவர்களுக்குப் போய்ச் சேர்ந்ததையும், திரைப்படத்தின் கதா நாயகி சுந்தரியை அவர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகக் கருதியதையும் தெரிய வந்தது.

அப்படியும், திரைப்படம் இன்னும் சிறிது மாற்றி இறுக்கப்பட வேண்டியிருந்தது. சில வசனங்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டியிருந்தது. திரைப்படத்தின் நீளம் அறை மணி நேரம் வரை குறைக்கப்பட்டது.

ஆறு மாதங்கள் பிறகு, திரைப்படத்தின் கடைசி பதிப்பு திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட இடம், சென்னை நகரின் வெளி விளிம்பிலுள்ள ஒரு சமூகக் கூடம். பார்த்தவர்கள் மதுரா நிறுவனத்தின் களப் பணியாளர்கள். இவர்களும் கிராமத்துப் பெண்களே.

திரைப்படம் முடிந்து விளக்குகள் மீண்டும் போடப்பட்டபோது, அங்கிருந்த ஒலிப்பதிவாளரின் கண்களிலிருந்து கண்ணீர் தாரையாக வடிவதை ஒரு மதுரா நிறுவனப் பணியாளர் கண்டார். அவரை அணுகி அவர் ப்ரச்சனை என்னவென்று விசாரித்தார்.

“இந்த திரைப்படத்தைப் பார்த்த பிறகு, நான் என் மனைவியை எவ்வளவு கெட்ட முறையில் நடத்தியிருக்கேனென்று உணர்கிறேன்...” என்றார் அவர். “எனக்கு வீட்டுக்குப் போய் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மீண்டும் ஒரு புதிய வாழ்வு ஆரம்பிக்க வேண்டும்,” என்றார். எதிர்ப்பார்த்ததை விட இத்திரைப்படம் பல புதிய முறைகளில் வெற்றி கண்டிருந்தது.

இந்தப் பயணம் ஒரு பெரிய பயணமாக இருந்திருக்கிறது. நமது ஏழை கிராம மக்களைப் பற்றியும் அவர்களது எதிர்கால வளர்ச்சியைப் பற்றியும் ஒரு உண்மையான கண்ணோட்டம், இதைப் படிப்பவர்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

மதுரா மைக்ரோ ஃபைனான்ஸ் ஒரு வங்கி சாரா நிதி நிறுவனம். இந்த நிறுவனம், இந்தியாவிலுள்ள தமிழ் நாட்டின் பல இடங்களிலிருந்து செயல்படுகிறது. நாங்கு லட்சம் கிராமப் பெண்களுக்கு சிறு கடனுதவி செய்வதுடன், அவர்கள் செய்யும் பொருட்களையும் சந்தைப் படுத்த உதவுகிறது. தான் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கடந்த நாங்கு வருடங்களில், மதுரா நிறுவனம் பத்து கோடி ரூபாய்க்கு மேல் கடனுதவி அளித்திருக்கிறது.

ப்ரக்ரிதி ஜீவா மீடியா என்பது ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். ஆக்கத் திறனும் அதி நவீன திரைப்படக் கருவிகளும் கொண்ட இந்த நிறுவனத்தை ஸ்தாபித்து நடத்துபவர்கள், உஷா ராஜேஸ்வரி மற்றும் ஆனந்த் தியாகராஜன் என்ற தம்பதியர். கருத்தாக்கத்திலிருந்து முழுமையான நிறைவு வரை, இந்த நிறுவனம், பல ஆவணப்படங்கள், தொலைக்காட்சிப் படங்கள், குறும்படங்கள், விளம்பரப்படங்கள், மற்றும் நிறுவனப் படங்களைத் தயாரித்திருக்கிறது, உற்பத்தி, சுற்றுப்புறச்சூழல், கலாச்சாரம் என்று பலவித விரிவான மையக் கருத்துக்கள் கொண்ட படங்களைத் தயாரித்திருக்கிறது.


கதாபாத்திரங்கள் & படைப்பாளிகள்

கதாபாத்திரங்கள்

தேவதர்ஷினி

தேவதர்ஷினி (சுந்தரி)

தேவதர்ஷினி 35 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்து, சமீபத்தில் வெளிவந்த ‘எந்திரன்’ திரைப்படத்திலேயும் நடித்திருக்கிறார். சின்னத் திரையிலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் நடித்திருக்கிறார். சின்னத் திரையில், ‘இனி ஒரு விதி செய்வோம்’ போல் சில பேச்சுத்திறன் காட்சிகளையும் சமையல் காட்சிகளையும் நிருவித்தொகுத்தளித்திருக்கிறார்.

சஷி குமார்

சஷி குமார் (முருகேசன்)

‘பாலு மஹேந்திரா கதை நேரம்’ என்ற தமிழ் தொலைக்காட்சித் தொடரில் தனது நடிப்பைத் தொடங்கிய சஷி குமார், அதன் பிறகு 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தலைச்சிறந்த இயக்குனரான மணி ரத்னத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்திலும், 2007ல் 3 தேசிய விருதுகள் பெற்ற ‘ஸ்ருங்காரம்’ என்ற திரைப்படத்தில் முதன்மை வேடத்திலும் நடித்திருக்கிறார். இரண்டாவது ஹீரோ, வில்லன், மற்றும் பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தற்போது, ‘குலசேகரனும் கூலிப்படையும்’, மற்றும் ‘விஜயனகரம்’ என்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


சம்பத்ராம்

சம்பத்ராம் (ராஜமாணிக்கம்)

நூறு தமிழ் திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் சம்பத்ராம். மற்றும், கன்னடா, மலையாளம் தெலுங்கு என்று பல மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். ‘மதராச பட்டினம்’, ‘சிங்கம்’, ‘யாவரும் நலம்’, ‘தமிழ்ப்படம்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘குசேலன்’, மற்றும் பத்மஸ்ரீ கமல்ஹாசன் நடித்த ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.’ திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.


விஷாலினி

விஷாலினி (பங்கஜம்)

பல திரைப்படங்களிலும் சின்னத் திரையிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் விஷாலினி. தமிழ் சின்னத்திரையில் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய ‘தெற்கத்திப் பொண்ணு’ என்ற சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது, ‘வந்தாளே மஹாராசி’, ‘அணு அளவும் பயமில்லை’, மற்றும் ‘காதல்’ என்ற சின்னத்திரைக் காட்சிகளில் நடித்து வருகிறார்.


சூரி

சூரி (வேலு)

‘வெண்ணிலா கபடிக் குழு’ என்ற திரைப்படத்தில் நடித்த சிரிப்பு வேடம் மூலமாகத்தான் சூரி முதன் முதலாக திரைப்படத்துறையில் தெரிய வந்தார். அதன் பிறகு ‘காதல்’, ‘ஜீ’, ‘தீபாவளி’ என்று பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார், மேலும் நடித்து வருகிறார்.


மனஸ்வினி (மரிக்கொழுந்து)

விளம்பரப் படங்களிலும் நாடக அரங்குகளிலும் நடித்து வந்த மனஸ்வினி, சென்னையிலுள்ள அபாகஸ் பள்ளிக்கூடத்தில் ஒன்பதாவது வகுப்பில் படித்து வருகிறார். அவளது பெற்றோர்களான ராதா நாராயணன், ஆல்ஃபோன்ச் ராய் இருவருமே திரைப்படத் துரையில் இயக்குனராகவும் ஒளிப்பதிவாளராகவும் விளங்குகிறார்கள். மனஸ்வினி பரத நாட்டியம் ஆடுவார். மேலும் திரைப்படங்களில் நடிக்கவும் இயக்கவும் ஆர்வமுண்டு. இது அவர் நடித்த முதல் திரைப்படம்.

 
T.K. கலா

T.K. கலா
(மங்கலம்)

Dr. S. ரகுராமன்

Dr. S. ரகுராமன்
(பாஸ்கர் சார்)

மலர்

மலர்
(ராஜம்மா)

மதுரை அன்னகாமாச்சி

மதுரை அன்னகாமாச்சி
(அஞ்சலை)

சத்தியஸ்ரீ

சத்தியஸ்ரீ
(சென்பகம்)

லக்ஷ்மி

லக்ஷ்மி
(அர்ச்சனா)

 

முத்து
(குமார்)

ஆர்த்திகா
(மஞ்சுளா)

உமா
(லக்ஷ்மி)

(ஊர் வம்பு) லக்ஷ்மி
(செந்தாமரை)

கோகுல் ராஜ்
(சுந்தரி தகப்பனார்)

S.A. ராஜா
(பஞ்சாயத்து தலைவர்)

மோஹன்
(துணை தையல்காரர்)

குமார்
(கடை உதவியாளர்)

அருண்
(டீக்கடைக்காரர்)

 

படைப்பாளிகள்

உஷா ராஜேஸ்வரி
திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர்

தமிழ் நாடு திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை மற்றும் இயக்கம் படித்து, அதில் தங்கப் பதக்கம் பெற்ற உஷா ராஜேஸ்வரி, ஆவணப் படங்கள், குறும்படங்கள், தொலைக்காட்சிப் படங்கள், விளம்பரம் மற்றும் நிறுவனப் படங்களை எழுதி, இயக்கி, தொகுத்திருக்கிறார். சுற்றுப்புறச் சூழல், கல்வி, சமூக வளர்ச்சி, கலை மற்றும் கலாச்சாரம் என, பலவித பொருட்கள் கொண்ட படங்களை எழுதி இயக்கியிருக்கிறார். ‘சிந்தனைச் சிற்பி’ என்ற அவரது ஆவணப்படம், கானடாவில், டொரோன்டோவில் நடந்த ‘ப்லானெட் இன் ஃபோகஸ்’ என்ற ஆவணப்பட விழாவில் அழைக்கப்பட்டு திரையிடப்பட்டது.

‘கலாட்டாக் குடும்பம்’ என்று, தலைமுறை இடைவேளையைப் பற்றியும் இளைஞர்களின் மாறிவரும் கருத்துகளைப் பற்றியும் அவர் எழுதி இயக்கிய சின்னத்திரை சீரியல், பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ‘சக்தி பிறக்குது’ அவர் இயக்கிய முதல் முழு நீள திரைப்படம்.


கோபால் ராவ்
இசையமைப்பாளர்

ஒரு பாடகரும் இசையமைப்பாளருமான கோபால் ராவ், ‘ஜோர்’, ‘சக்தி’, ‘ஹரிச்சந்திரா’ போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். 140ம் மேலான திரைப்படப் பாடல்களைப் பாடியுமிருக்கிறார். ‘பைசா’ என்ற பெயரில், ஹிந்தி மொழியில், 2002ல் அவர் தயாரித்த இசைத்தட்டு இன்றுவரை எம்.டி.வி., சானல் வி, ஜீ ம்யூசிக், போன்ற சின்னத்திரை சானல்களில் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கிறது. ‘சக்தி பிறக்குது’ அவர் முதல் முறையாகத் தனியே இசையமைப்பாளராக விளங்கும் முழு நீள திரைப்படமாகும்.


ஆனந்த் தியாகராஜன்
ஒளிப்பதிவாளர்

ஒளிப்பதிவாளரும் படத்தொகுப்பாளருமான ஆனந்த் தியாகராஜன், ஒலி அமைப்பதிலும் ஸ்டூடியோ கட்டமைப்பதிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர். தமிழ் நாடு திரைப்படக் கல்லூரியில் படித்த அவர்,
‘ஹம் லோக்’ என்ற பிரபல தொலைக்காட்சித் தொடரிலும் வேறு பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். ஓமானிலும் கத்தாரிலும் உள்ள ‘ஆக்ஷன் ஃபில்ம்ஸ்’ என்ற நிறுவனத்திற்காக தொழில் நுட்ப இயக்குனராக திகழ்ந்திருக்கிறார்.

பாடல்கள் & பாடல் வரிகள்

 
 

மக்கள் கருத்து

விரைவில்...

திரை முன்ணோட்டம்

விரைவில்...

மதுரா மைக்ரோ பைனான்ஸ், ப்ரக்ரிதி ஜீவா மீடியாவுடன் இனைந்து வழங்கும்